6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும்


6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும்
x

தங்க நகைகளுக்கு தரத்தை உறுதி செய்யும் வகையில் 6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென வணிக வட்டாரத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்

தங்க நகைகளுக்கு தரத்தை உறுதி செய்யும் வகையில் 6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென வணிக வட்டாரத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஹால்மார்க் முத்திரை

தங்க நகைகளுக்கு தரத்தை உறுதி செய்யும் வகையில் 6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட வேண்டுமென்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் திட்டம் அமலுக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்க நகை வாங்குவோர் ஹால்மார்க் முத்திரையின் மூலம் தங்க நகைகளின் தரம், விற்பனையாளர், டிசைன் ஆகிய விவரங்களை அதற்கான செயலிமூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தங்க நகை வணிக வட்டாரத்தினர் கூறியதாவது;- தற்போது மத்திய அரசு ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு 6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட வேண்டுமென அறிவித்துள்ளது. ஆனால் தற்போது உள்ள நிலையில் கையிருப்பில் உள்ள நகைகளுக்கு 6 இலக்க ஹால்மார்க் முத்திரையிட மேலும் கால அவகாசம் தேவைப்படும் நிலையில் திட்டத்தினை அமல்படுத்த மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

கட்டணம் நிர்ணயம்

தற்போது ஒரு நகைக்கு ஹால்மார்க் முத்திரையிட ரூ.45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டணத்தை ரூ. 10 ஆக நிர்ணயிக்க வேண்டும். மேலும் ஹால்மார்க் முத்திரையிடும் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது உள்ள நிலையில் தேசிய அளவில் 766 மாவட்டங்களில் 379 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் விவரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹால்மார்க் முத்திரை மையங்கள் ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 1,500 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் நாடு முழுவதும் திட்டம் அமல்படுத்தப்படும் போது இந்த மையங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story