அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது
அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற மணி (வயது 40). இவர் கருங்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் பழைய கார்களை வாங்கி அதனை உடைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இதனால் குடும்பத்துடன் பாளையங்கோட்டை குலவணிகர் புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணியன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கனவே தெற்கு காரசேரி பகுதியை சேர்ந்த மாடசாமி, இசக்கியப்பன் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த பேராட்சி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.