வாலிபர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு கல்லூரி மாணவர் கைது


வாலிபர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு கல்லூரி மாணவர் கைது
x

திண்டிவனம் அருகே நடந்த வாலிபர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம்

திண்டிவனம்

வாலிபர்

திண்டிவனம் அருகே உள்ள அகூர்கிராமத்தைச் சேர்ந்தவர் எமராஜ் மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 31). தொழிலாளியான இவரை கடந்த மே மாதம் 21-ந் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் மனுகொடுத்தனர்.

கல்லூரி மாணவர் கைது

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார், வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்த நிலையில் வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த செஞ்சி தாலுகா மேல் அத்திப்பாக்கம் ஏதாநெமிலி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரதீபன்(20) என்பவரை பிடித்து வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இவர் திண்டிவனம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story