ரெயிலில் அடிபட்டு மேலும் ஒரு மான் பலி
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு மேலும் ஒரு மான் பலியானது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் - திருப்பதி ரெயில் பாதையில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று ரெயிலில் அடிபட்ட நிலையில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த மான் உடலை மீட்டு இது குறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை அரக்கோணம் கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அப்பகுதியிலேயே எரியூட்டினர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த போது கடந்த 15 நாட்களில் இதுவரை ரெயிலில் அடிபட்டு சுமார் 7 மான்கள் வரை இறந்திருக்கும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story