கலெக்டர் அலுவலகத்துக்கு மேலும் ஒரு நுழைவுவாயில்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மேலும் ஒரு நுழைவு வாயில் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மேலும் ஒரு நுழைவு வாயில் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அலுவலகம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1802-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 4 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் 18 அறைகள் என மொத்தம் 72 அறைகள் உள்ளன.
இங்கு முதல் தளத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், கலெக்டரின் நேர்முக எழுத்தர், கூட்ட அரங்கம், காணொலி காட்சி அறை, வரவேற்பு அலுவலர் உள்பட 23 பிரிவுகளும், 2-ம் தளத்தில் 25 பிரிவு அலு வலகங்களும், 3-வது தளத்தில் 27 அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் ஒரு நுழைவு வாயில்
இதுதவிர கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் இ-சேவை மையம், நுகர்வோர் கோர்ட்டு, சித்த மருத்துவ மையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. அதன் வழியாகவே அதிகாரி கள், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சில நேரங்களில் நெரிசல் ஏற்படுவதால் சிரமம் ஏற்பட்டது.
எனவே கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதலாக ஒரு நுழைவு வாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின்பேரில் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வகையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத் துக்கும் சார்-பதிவாளர் அலுவலகம் இருந்த இடத்துக்கும் நடுவே இருந்த சுவர் இடிக்கப்பட்டு மேலும் ஒரு நுழைவு வாயில் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நடந்து செல்ல தனிபாதை
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய நுழைவு வாயில், வழியாக வாகனங்கள் உள்ளே செல்லவும், பழைய நுழைவு வாயில் வழியாக வாகனங்கள் வெளியே வரவும் பயன்படுத்தப் பட உள்ளது. மேலும் புதிய நுழைவு வாயிலில் பொதுமக்கள் நடந்து செல்ல தனியாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது என்றனர்.