வேலூர் கோட்டையில் மீண்டும் தீ விபத்து


வேலூர் கோட்டையில் மீண்டும் தீ விபத்து
x

வேலூர் கோட்டையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தின் அடையாளமாக வேலூர் கோட்டை திகழ்கிறது. கோட்டையை சுற்றிப் பார்க்க பிற மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டையை அழகு படுத்துவதற்காக அலங்கார மின் விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் கோட்டையை பார்க்கும் பொழுது வண்ணமிகு காட்சியாக இருக்கிறது. கடந்த வாரம் வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து புதிய மீன் மார்க்கெட் செல்லும் சாலை அருகே கோட்டை அகழிக்கரையோரம் மர்ம நபர்கள் அங்குள்ள செடி, கொடிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அங்கு புகைமூட்டம் சூழ்ந்து பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து வேலூர் தீணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் மின்விளக்குகள் ஒயர் தீயில் கருகி நாசமாகின.

இந்த நிலையில் நேற்று மாலை புதிய மீன் மார்க்கெட் அருகே கோட்டை அகழி கரையோரம் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்றனர். தொடர் சம்பவமாக கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story