கோவை தம்பதி மீது மேலும் ஒரு மோசடி புகார்


கோவை தம்பதி மீது மேலும் ஒரு மோசடி புகார்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம், டாலர் திருடிய வழக்கில் தொடர்புடைய கோவை தம்பதி மீது ரூ.90 லட்சம் மோசடி செய்துவிட்டதாக மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

பணம், டாலர் திருடிய வழக்கில் தொடர்புடைய கோவை தம்பதி மீது ரூ.90 லட்சம் மோசடி செய்துவிட்டதாக மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

தம்பதி மீது வழக்கு

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37), கேட்டரிங் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தங்கிய நண்பரான நிறைமொழி, அவருடைய மனைவி நிவேதிதா ஆகியோர், அங்கிருந்த லாக்கரை திறந்து, அதற்குள் இருந்த ரூ.4½ லட்சம் ரொக்கம், ரூ.2¼ லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், ரூ.2¼ லட்சம் வைர நகை ஆகியவற்றை திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் நிறைமொழி, நிவேதிதா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தம்பதி மீது கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தீபா என்ற பெண் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் தொழில்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த நிறைமொழி, அவருடைய மனைவி நிவேதிதா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க உள்ளதால் ரூ.1 கோடி கொடுங்கள், வெள்ளக்கிணறு பகுதியில் எங்களுக்கு ரூ.1 கோடிக்கு சொத்து இருப்பதால் அவற்றை விற்று விரைவில் திரும்ப கொடுத்து விடுகிறோம் என்று கூறினார்கள்.

இதையடுத்து நான் ரூ.90 லட்சம் கொடுத்தேன். ஆனால் இதுவரை அந்த பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து வருகிறார்கள். எனவே எனது பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story