நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் பலி


நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் பலி
x

கங்கைகொண்டான் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூர் பாலத்தின் இறக்கத்தில் நேற்று அதிகாலையில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை டிரைவர் சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். அப்போது விருதுநகரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு நெல்லைக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை விருதுநகர் மன்னார்கோட்டை ஆவுடையார்புரம் கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர் மகன் பாண்டி (வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.

பாலம் இறக்கத்தில் லாரி வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் பாண்டி படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story