விபத்தில் மேலும் ஒருவர் சாவு


விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x

இரணியல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

இரணியல் அருகே உள்ள நெய்யூர் ஆத்திவிளை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிரதீஷ் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு வருகிற 1-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக பிரதீஷ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதீஷ் நெய்யூர் பால் தெரு பகுதியை சேர்ந்த ரெஜு (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு இரணியல் கோணம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்தனர். மோட்டார் சைக்கிளை பிரதீஷ் ஓட்டினார்.

அப்போது பொன்மனை காந்திநகர் பகுதியை சேர்ந்த கிறிஸ்து தாஸ் மகன் ராஜசேகர் (40), ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் (48) என்பவரும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

பலி எண்ணிக்கை உயர்வுஇரணியல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பிரதீஷ், ராஜசேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த ரெஜு, ராஜன் ஆகிய இருவரும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.


Next Story