தூத்துக்குடியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு


தூத்துக்குடியில்  மோட்டார்சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு-  பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவருடைய மகன் விக்னேஷ் ராஜா (வயது 17). இவர் தனது நண்பரான தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஹமீது மகன் ஆசிக் (17), விக்னேஷ் ராஜாவின் உறவினரான தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மாரிச்செல்வம் என்ற கண்ணன் (22) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் ராஜாவின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் திருச்செந்தூர் ரோடு, எம்.ஜி.ஆர். நகர் மேம்பாலம் பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விக்னேஷ்ராஜா, ஆசிக் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயம் அடைந்த மாரிச்செல்வம் என்ற கண்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மேலும் ஒருவர் சாவு

இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாரிச்செல்வம் என்ற கண்ணன், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story