கைதானவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக மேலும் ஒருவர் கைது


கைதானவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக மேலும் ஒருவர் கைது
x

மயிலாடுதுறையில், வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில், வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வன்னியர் சங்க பிரமுகர் கொலை

மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி இரவு முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் திவாகர், ரஞ்சித், சந்துரு, அஜித்குமார், ஹரிஷ் ஆகிய 5 பேர் மட்டும் குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில் கண்ணனை கொலை செய்தவர்களை பழி வாங்குவதற்காக அவரது ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டியதாக வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த ராகுல் (23), மயிலாடுதுறை குமரக்கட்டளை தெருவை சேர்ந்த சேர்ந்த சத்யநாதன் (19), தருமபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (21), கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்த அபினாஷ் (22), பட்டுக்கோட்டையை சேர்ந்த மன்னாரு என்கிற அருண்பாண்டியன் (32) ஆகிய 5 பேரை நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள்களுடன் மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இதில் மன்னாரு என்கிற அருண்பாண்டியன் மீது பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், வழக்கு தொடர்பாக சந்திரமோகன், ரஞ்சித், கட்டபொம்மன், முருகன் மகன் மணிகண்டன், அன்பரசன், சதீஷ், முத்து மகன் மணிகண்டன், புதுக்கோட்டையைச் சேர்ந்த கபிலன், பாண்டியன், மணிகண்டன் ஆகிய 10 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை குமரக்கட்டளை தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story