ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
கோவையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. ரவுடி. இவர் மீது கோவை, மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் அவரை கடந்த மாதம் 12-ந் தேதி மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் முன்விரோதம் காரணமாக சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே இந்த கொலையில் தொடர்பு உடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்த நிலையில் சத்தியபாண்டி கொலை தொடர்பாக சஞ்செய் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கடந்த வாரத்தில் சஞ்செய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து சஞ்செய்குமார் உள்பட 5 பேரையும் போலீசார் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்துடன் அவர்கள் 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 24-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, சஞ்செய்குமார், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான், சஞ்செய் ராஜா ஆகிய 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.
மேலும் ஒருவர் கைது
இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த 5 பேரையும் உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் சம்பவம் நிகழ்ந்த இடம், கத்தியை பதுக்கிய இடங்களுக்கு அழைத்துச்சென்று சத்திய பாண்டி கொலை தொடர்பாக விசாரித்தனர். இதில் மேலும் ஒருவர் சிக்கினார்.
அவர், கோவை தீத்திப்பாளையத்தை சேர்ந்த இருசக்கர வாகன ஒா்க் ஷாப் நடத்தி வந்த மணிகண்டன் (25) என்பதும், அவருக்கு 5 பேரும் நண்பர்கள் என்பது தெரிய வந்தது.
கொலை நடந்த உடனே அவர்கள் 5 பேரும் மணிகண்டன் ஒர்க் ஷாப்க்கு வந்து உள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் கொலைக்கு பயன்ப டுத்திய கத்தியை மறைத்து வைத்து உள்ளனர். இதற்கு மணிகண்டன் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைதுசெய்தனர்.
போலீஸ் காவல் நிறைவு
இதற்கிடையே சஞ்செய்குமார், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான், சஞ்செய் ராஜா ஆகிய 5 பேரின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர்களை போலீசார் நேற்று மதியம் கோவை அரசு ஆஸ்பத்திாிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத் தினர். இதையடுத்து அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ் திரேட்டு உத்தரவிட்டார்.