விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு

கடையம் அருகே விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் இறந்தார்.
கடையம்:
சென்னை புழல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் அசோக் குமார் (வயது 28). என்ஜினீயர். இவர் தனது நண்பர்களான மற்றொரு அசோக் குமார் உள்பட 6 பேருடன் காரில் குற்றாலம் வந்தார். அங்கேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். தொடர்ந்து என்ஜினீயர் அசோக் குமார், அவரது நண்பர்கள் அசிப், மற்ெறாரு அசோக் குமார் ஆகிய 3 பேருடன் குற்றாலத்தில் இருந்து பாபநாசத்தில் குளித்துவிட்டு மீண்டும் கடையம் வழியாக காாில் குற்றாலத்திற்கு திரும்பினர்.
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியை கடந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் என்ஜினீயர் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அசிப் மற்றும் மற்றொரு அசோக்குமார் பலத்த காயத்துடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மற்றொரு அசோக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.