சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
அதிரடி சோதனை
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ரூ.1 லட்சம் கைமாறப்போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மாலை திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்தை ஜன்னல் வழியாக ெவளியே தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர்.
விசாரணை
மேலும் இது தொடர்பாக அலுவலகத்தில் இருந்த பதிவாளர்(பொறுப்பு) இந்துகுமார் உள்பட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.