குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 3:39 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.

தேனி


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்பதற்கான உறுதி மொழி ஏற்கப்பட்டது. கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அரசு துறை அலுவலர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கருப்பையா, அறிவழகன், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


Next Story