ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஒரு தனியார் பள்ளியில் கரூர் வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் வருமான வரித்துறை அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் வருமானவரி ஆய்வாளர் மீனாட்சி, முதுநிலை வரி உதவியாளர் கோபி, வருமான வரித்துறை ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story