ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு வாரமாக அக்டோபர் 31-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி, கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகம் வரை சென்றது.

ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. லஞ்சம் கொடுப்பது- வாங்குவது பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். இதில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story