ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வேலூர்

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வேலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சார்பில் ஊழல் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரமூர்த்தி கலந்து கொண்டு 'வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா' என்ற தலைப்பில் பேசினார்.

அதைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் காணொலி மூலம் ஊழலை தடுப்பது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கூட்டத்தில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ்செல்வன் செய்திருந்தார்.


Related Tags :
Next Story