திருவண்ணாமலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


திருவண்ணாமலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x

திருவண்ணாமலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் அருகில் தொடங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக ஊர்வலம் நடைபெற்ற போது திருவண்ணாமலையில் சாரல் மழை பெய்ததால் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், முருகன், தலைமை காவலர்கள் சரவணன், கோபிநாத், கமலக்கண்ணன், ரஜினிக்குமார், நந்தகுமார், அறிவழகன், திருவண்ணாமலை விஷன் பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் கல்லூரி தலைவர் ரேணுகோபால், தாளாளர் வெங்கடேசன், கல்லூரி முதல்வர் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story