ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கரூரில் நடைபெற்றது.

கரூர்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் கரூர் அரசு கலைக்கல்லூரி சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது கரூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் என் நோக்கம் ஊழலற்ற இந்தியா, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவோம், கையூட்டு வரும் முன்னே, கைவிலங்கு வரும் பின்னே, நேர்மையே நமது வாழ்வின் வழிமுறை என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ- மாணவிகள் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், மணிவேல் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story