பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை


பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.

சிவகங்கை

காரைக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணனின் ஓய்வறை மற்றும் அவரது ஜீப் ஆகியவற்றில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.32 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் உள்ள செயற்பொறியாளர் கண்ணன் வீட்டில் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீடு மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது.

மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை சில மணி நேரம் நடந்தது. சோதனை முடிந்து சென்ற போலீசார் ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா? என சொல்ல மறுத்துவிட்டனர்.

1 More update

Related Tags :
Next Story