போதைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி


போதைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
x

ஆற்காட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ். முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசுவேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story