திமிரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திமிரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திமிரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திமிரி போலீஸ் நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திமிரியில் நடந்தது. ஊர்வலம் பஸ் நிலையத்தில் தொடங்கி போலீஸ் நிலையம் வரை சென்றது. அப்போது போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு நாடகங்களை கல்லூரி மாணவ -மாணவிகள் நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உறுதி மொழியும் ஏற்றனர்.
ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கல்லூரி முதல்வர் கவுதமன், புல முதன்மையர் நிர்மலா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பவித்ரன், மனோஜ், ஜேக்கப் அசரியா, உடற்கல்வி இயக்குனர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.