அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாகை மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாகை மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருளால் ஏற்படும் தீங்குகள் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் அனைவரையும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க செய்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சி குழுவினர் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.


Next Story