போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா குழும செயலாளர் டி.எஸ்.ரவிகுமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, ரோட்டரி சங்க தலைவர் கே.சதீஷ், செயலாளார் ஆர்.பி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதவி கலெக்டர் பாத்திமா மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொள்ள வேண்டாம், படிக்கும் வயதில் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய ரோட்டரி சங்க தலைவர் சதீஷ், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக்கொண்டு, உறுதிமொழியை இறுதிவரை கடைபிடிப்போம் என உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story