போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி
திருச்சி மாநகர போலீஸ் சார்பில் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே முக்கிய இடங்களில் போதை ஒழிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவ-மாணவிகள் இடையே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






