போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அய்யன்கொல்லியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அம்பலவயல் அரசு உயர்நிலை பள்ளி, நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகம், அம்பலமூலா போலீஸ் நிலையம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அய்யன்கொல்லியில் நடைபெற்றது. பேரணியை நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அரசு பள்ளியில் இருந்து பேரணி தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அய்யன்கொல்லி பஜார் வரை சென்றது. போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பேசும்போது, போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இதனால் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. போதைப்பொருளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்றார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.