போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆலங்குளத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் மது மற்றும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ஷீலா தலைமை தாங்கினார். ஆலங்குளம் பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நடந்த இந்த பேரணியை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார். மேலும் மது போதை பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் எடுத்துரைத்தார். பேரணியில் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன், கல்லூரி மாணவிகள் பேரவை தலைவி பொன்சி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story