போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி

ஊட்டி

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் இருப்பதாகவும், அதை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு, டி.ஜி‌பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி ஒருபுறம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மற்றொருபுறம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி தேனாடுகம்பை போலீசார், அணிக்கொரையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க உறுதுணையாக இருப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதற்கு ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போதைப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியவாறு சென்றனர்.


Next Story