போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 11-ந் தேதியில் இருந்து வருகிற 19-ந் தேதி வரை நடத்தப்பட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதனை போக்குவரதது போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் சந்திப்பிலிருந்து தொடங்கி காமராஜர் சாலை முனிச்சாலை குயவர்பாளையம் வழியாக செயின்ட் மேரிஸ் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை பாதகை ஏந்தி கோஷங்கள் எழப்பி பேரணியாக அணிவகுத்து சென்றனர். முடிவில் மாணவர்கள் போதை விழிப்புணர்வுக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பேரணியில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி, ரமேஷ்குமார், கணேஷ்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உறுதி மொழி
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கினார்.போதை ஒழிப்பு சட்டங்கள் பற்றி இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி டாக்டர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், முத்துக்குமார், ராஜேஷ் ஆகியோர் பேசினர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
போதை பொருள் இல்லா தமிழ்நாடு திட்டம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சோழவந்தான் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஜோஸ்வாஷ்கம்பீரம் போதை தடுப்பு உறுதிமொழி வாசித்தார்.