போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

கொளப்பள்ளி அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். வளர்ச்சி குழு நிர்வாகிகள் தியாகராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் சுப்பையா, சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். முன்னதாக முகாமில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், மேலும் குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது, போதை பழக்கத்துக்கு அடிமையாவது, இதனால் குடும்பத்துக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ஸ்டார்லின் மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story