போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருக்கோவிலூர் அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் திருக்கோவிலூர் அருகே உள்ள மொகலார், பழங்கூர், நத்தாமூர், அத்திப்பாக்கம், கிளியூர் மற்றும் துறிஞ்சிப்பட்டு ஆகிய கிராமங்களில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை கல்லூரி தலைவரும், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான ஆர்.செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரகண்டநல்லூரில் நடைபெற்ற பேரணியை தொழிலதிபர் எம்.எஸ்.கே.அக்பர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழில் அதிபர் எம்.எஸ்.கே.பாபு வாழ்த்துரை வழங்கினார். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் வி.ஏழுமலை, துணை தலைவர் எஸ்.முஸ்டாக்அஹமத், தாளாளர் பழனிராஜ், முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.