போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் தலைமை தாங்கினார். கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் மாரித்துரை வரவேற்றார். பனவடலிசத்திரம் போலீஸ் நிலையம் முன்பு இன்ஸ்பெக்டர் காந்திமதி, பேரணியை தொடங்கி வைத்தார். பனவடலிசத்திரம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சமி யேசுதாஸ், போதை பொருள் இல்லாத உலகமாக மாற வேண்டும் என்று உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தினார். கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிவக்குமார் மற்றும் பேராசிரியர் ராமபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், வணிகவியல் துறை தலைவருமான எஸ்.சுவாமிதாஸ் கலந்துகொண்டு போதை பொருள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் திட்ட அலுவலர் ஷீபா பார்லின் நன்றி கூறினார். நிகழ்ச்சியை திட்ட அலுவலர் கொம்பையா தொகுத்து வழங்கினார்.

1 More update

Next Story