போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சியில் ச.சவி.மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். 6-வது வார்டு உறுப்பினர் ரேகா முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அருள் பீட்டர்ராஜ், உதவி திட்ட அலுவலர் பொன்ராஜ் செபஸ்தியான் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் போதை விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

1 More update

Next Story