வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

வால்பாறை

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் அறிவுரையின்படி வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் வால்பாறை நகரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. வால்பாறை, முடீஸ், காடம்பாறை, சேக்கல்முடி ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், கருணாகரன், வேல்முருகன், ஏசையன் ஆகியோருடன் இணைந்து போலீசார் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் முடிவடைந்தது.


Next Story