போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் மெர்சி ரம்யா உறுதிமொழியினை வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கூறி ஏற்றனர். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கீழ ராஜ வீதி வழியாக நகர்மன்றத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி சென்றனர். முன்னதாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஊர்வலத்தில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் தலைமை ஆசிரியர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் போதை தடுப்பு விழிப்புணர்வு நேரடி உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவ- மாணவிகளின் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் இருந்து கடைவீதி வழியாக நடைபெற்றது. கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன் குறிச்சி தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதேபோன்று அன்னவாசல் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.


Next Story