போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஆரணியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, ஆரணி டவுன் போலீஸ் நிலையம் மற்றும் கோட்டை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பள்ளி தாளாளர் டாக்டர் வி.தியாகராஜன் தலைமை தாங்கினார். டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துலிங்கம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம், கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் கோகுல்ராஜ், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியை ரோஸ்லின் ஞானமணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் போதை பொருள் தடுப்பது குறித்தும், சாைல பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

ஊர்வலம் பழைய ஆற்காடு சாலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக அண்ணா சிலை வரை சென்று மீண்டும் அதே வழியாக பள்ளிக்கு சென்று நிறைவடைந்தது.

வழி நெடுகிலும் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வழங்கி சென்றனர்.

இதில் ஆசிரியர்கள் சசி, ஆனந்தி, சைமன், பால்பிரபாகரன், மில்டன், ரூபி பிரேமா, ஜான் பீட்டர் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story