போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Jun 2023 1:30 AM IST (Updated: 25 Jun 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் உத்தமபாளையம் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது

தேனி

உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் உத்தமபாளையம் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தமபாளையத்தில் உள்ள கிராம சாவடியில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் உதயகுமார், நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story