போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோக், முதுகலை ஆசிரியர் குமரவேல், உடற்கல்வி இயக்குனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் கலந்துகொண்டு போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தினை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான சாலையான காந்தி சாலை, ஆற்காடு சாலையில் உழவர் சந்தை வரை சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சரவணன், டி.ரகுராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story