கோவை பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான 'கிளப்புகள்'

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான 'கிளப்'' தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான 'கிளப்'' தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
விழிப்புணர்வு
தமிழகம் முழுவதும் நேற்று போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கல்லூரி செயலாளர் சரஸ்சுவதி கண்ணையன் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்றனர். பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிளப்புகள்
கோவையில் மாணவர்கள் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளோம். போதை பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு மையம் ஆரம்பித்துள்ளோம். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான கிளப்புகளை தொடங்க உள்ளோம். என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்களை ஒருங்கி ணைத்து இந்த கிளப் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






