முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி
x

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

நீலகிரி

கூடலூர்

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி வரவேற்றார். சமூக நலத்துறையின் நல அலுவலர்கள் லீலா, ரேணுகா கலந்து கொண்டு பேசினர். தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் முதியோர்களை பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அது தொடர்பான ஓவியங்கள் வரைந்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.


Next Story