சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:47 PM GMT)

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தில் மகாத்தமா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார்(வயது 29), தினேஷ்குமார்(23), ரவி(40) ஆகிய 3 பேரை தியாகதுருகம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் அவர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் வசந்தகுமார் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


Next Story