தூத்துக்குடியில்இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்


தூத்துக்குடியில்இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க துண்டு பிரசுரம் வினியோகத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்க துண்டு பிரசுரம் வினியோகத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

பொதுக்கூட்டம்

தமிழக சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடத்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.

துண்டுபிரசுரம்

இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் குறித்த விளக்க துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். அவர் எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story