கீழ்புளியங்குடி அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கீழ்புளியங்குடி அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கீழ் புளியங்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஆகியன இணைந்து புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மெஹருன்னிசா தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை மகாலட்சுமி முன்னிலை வகித்தார். ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அன்பரசன் கலந்து கொண்டு, புகையிலை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து புகையிலையை ஒழிப்போம், புற்றுநோயை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களோடு மாணவர்கள் கிராம வீதிகளின் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, சித்தார்த், பள்ளி மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் தினேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.