போதை பொருள் ஒழிப்பு ஊர்வலம்
இந்து முன்னணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு ஊர்வலம் நடந்தது.
கோவை
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சுந்தராபுரம் முருகாநகர் பஸ் நிலையத்தில் நேற்று தொடங்கியது. அது சங்கம் வீதியில் முடிவடைந் தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் திரளான அளவில் கலந்துகொண்டனர். மாநில இளைஞர் முன்னணி ஒருங்கிணைப் பாளர் சி.பி.சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தை தொடங்கி வைத்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறும்போது, போதை பொருள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் போதை பொருளுக்கு பெண்கள், மாணவிகள் அடிமையாகி வருகிறார்கள். எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். போதை பொருள் கடத்தலை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படும் என்றார். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜே.எஸ்.கிஷோர்குமார் எஸ்.சதீஷ், ஜெய்சங்கர், கிருஷ்ணா, சி.தனபால், ஆனந்த், ஆர்.ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.