பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

கீழப்பாவூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வைத்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கினாார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசவுந்தரி, முருகன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் வரவேற்றார். தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், கிருஷ்ணவேணி மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூனியன் தலைவி காவேரி அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கினார்.


Next Story