பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

திருவிடைமருதூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கடை வீதியில் திருவிடைமருதூர் பேரூராட்சி, ரெட்கிராஸ் உள்ளிட்ட பொது நல அமைப்புகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, ரத்ததானம், கண் தானம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி துணை தலைவரும், வர்த்தக சங்க காப்பாளருமான சுந்தர ஜெயபால் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், பேரூராட்சி செயல் அலுவலர் முத்துக்கண்ணு, ரெட் கிராஸ் வி. எம். பாஸ்கரன் மற்றும் பொது நல அமைப்பினர், பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story