திருச்சி விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை


திருச்சி விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
x

திருச்சி விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த விமானங்களில் பயணிகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ஆண்டுக்கு இரு முறை பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஒத்திகையானது நேற்று திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மத்திய தொழில் பாதுகாப்பு துணை கமிஷனர் ஹரி சிங் நயாள் முன்னிலை வகித்தார். விமான நிலைய ஆணையக் குழுவினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல்வேறு பிரிவுகள், விமான நிலைய தீயணைப்புத் துறையினர், விமான நிறுவன ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். இதில் விமான பயணி பயங்கரவாத தடுப்பு முறை குறித்து செய்முறை செய்து காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story