புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு சுகாதார பணிகள் துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துறை ஆய்வாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். சமூக பணியாளர் மதுமிதா முன்னிலை வகித்தார். இதில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், புகையிலை தடை சட்டத்தின்படி அபராதம் மற்றும் தண்டனைகள், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக குற்றங்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து போதை பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story