புகையிலை எதிர்ப்பு தின பேரணி


புகையிலை எதிர்ப்பு தின பேரணி
x
தினத்தந்தி 28 July 2023 8:45 PM GMT (Updated: 28 July 2023 8:46 PM GMT)

புகையிலை எதிர்ப்பு தின பேரணி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நேற்று காலை கோத்தகிரியில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை சுகாதார துறை இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியானது நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேரூராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு செயல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத்தலைவர் உமா நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாதவ கிருஷ்ணன், ரமேஷ், ரஹ்மான்கான், குணா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் குமாரசாமி நன்றி கூறினார்.


Next Story